சபரிமலையில் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பெண்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பந்தளத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.சபரிமலையில் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இது மதநம்பிக்கைக்கும், ஆசாரங்களுக்கும் எதிரானது என்றகருத்து வலுத்து வருகிறது. கேரளாவில் பெண்கள் இதற்காக போராட்டம் நடத்திவருகின்றனர்.


பம்பை கணபதி கோயில் அருகே தொடங்கிய பெண்களின் போராட்டம் மாநிலம்முழுவதும் பரவி வருகிறது. 'பெண்கள் வந்தால் நாங்களே தடுப்போம், சபரிமலை காப்போம், காத்திருக்க தயார்' உள்ளிட்ட கோஷங்களை முன்வைத்து அவர்கள் போராடுகின்றனர். முதலில் எல்லா பெண்களையும்அனுமதிக்கலாம் என கூறிவந்த சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட பெண்கள் பொங்கி எழுந்ததை கண்டு தங்கள் நிலைபாட்டை மாற்றி கொண்டுள்ளன.

ஐயப்பன் வளர்ந்த மண்ணான பந்தளத்தில் நடந்தபோராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதனால் பந்தள நகர் ஸ்தம்பித்தது. தீர்ப்பை அமல்படுத்த துடிக்கும் கம்யூனிஸ்ட் அரசின் தலைமையும் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளது. பெண்களின் கோபம் ஓட்டுவங்கியை பாதிக்கும் என்பது உறுதியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.