பெண்ணின் குறைந்தபட்ச திருமணவயது தொடர்பாக ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட ஆணையம் அளித்திருக்கும் அறிக்கையின் அடிப்படையில், விரைவில் குறைந்தபட்ச வயதில் மாற்றம் குறித்து முடிவுசெய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாட்டில் முதல்முறையாக, ஆண்களை விடவும் படித்த பெண்களின் விகிதம் உயர்ந்திருப்பதாகவும், மத்தியஅரசு கடந்த ஆறு ஆண்டுகளாக எடுத்த நடவடிக்கையின் காரணமாக இந்தமாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு, காணொலிகாட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இதனைத்தெரிவித்தார்.

Comments are closed.