சட்டப் பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றின் பெண் உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் தேசிய மகளிர் மக்கள் பிரதிநிதிகள் மாநாடு தில்லியில் மார்ச் 5, 6 ஆகியதேதிகளில் நடைபெறுகிறது.


 "எழுச்சிமிகுஇந்தியாவைக் கட்டமைக்கும் மகளிர்மக்கள் பிரதிநிதிகள்' எனும் தலைப்பில் தில்லி விஞ்ஞான் பவனில் இந்தமாநாடு நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி சனிக்கிழமை தொடக்கிவைக்கிறார். இதில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச நாடாளுமன்ற அவைத்தலைவர் டாக்டர் ஷிரின் ஷர்மின் சௌதுரி ஆகியோர் பங்கேற்கின்றனர்.


 நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நண்பகல் 12 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சென்ட்ரல் ஹாலில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்புரை யாற்றுகிறார். மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நிறைவுரையாற்றுகிறார்.


 மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனின் முயற்சியால் நடைபெறும் இந்தமாநாட்டில் நாடு முழுவதும் இருந்து எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் என 300-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தமாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.

Leave a Reply