மத்திய அரசு பெண்ஊழியர்கள் பாலியல் தொல்லைக்குள்ளாக்கப்பட்டால் விசாரணை காலத்தின்போது, அவர்களுக்கு 90 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப் படுவதாக மத்திய அரசுப் பணியாளர் நலன்துறை அண்மையில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பணியிடத்தில் தங்களது மேலதி காரிகளால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பாலியல்புகார் தொடர்பாக அமைக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழுக்கள் புகாரின் பேரில் விசாரணை நடத்திவரும் காலத்தில் மூத்த அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களுக்கு மிரட்டல்கள், அச்சுறுத் தல்கள் ஏற்படுகின்றன…

இந்த மிரட்டல்கள் தொடர்பாக வந்தபுகாரை அடுத்து பாலியர் புகார் தொடர்பான விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 மாதங்கள் ஊதியத்துடன்கூடிய விடுப்பை வழங்கவேண்டும் என்று மத்திய பணியாளர் நலன்துறை அமைச்சகம் சமீபத்தில் பணியடத்தில் பெண்களுக்கு பாலியல்தொல்லைகள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது.

மேலும் இந்த விடுமுறை யானது மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட விடுப்புக்கு கூடுதல்விடுப்பாகும் என்றும் அந்த விடுமுறைக் கணக்கிலிருந்து இந்த சிறப்பு விடுப்பு கழித்துக் கொள்ளப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply