பத்திரிகையாளர் சந்திப்பின் போது பெண் பத்திரிகையாளரை எதார்த்தமாக கன்னத்தில் தட்டியதது சர்ச்சை ஆக்கப்பட்டுள்ளது.  இதனால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தனது நடவடிக்கை குறித்தும் விளக்கமளித் திருக்கிறார்.

அந்த கடிதத்தின் விவரம் வருமாறு:

18.04.2018 தேதியிட்டு எனக்கு உங்களிடமிருந்து ஒருஇமெயில் வந்துள்ளது. நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பு முடியும் தருவாயில் நான் எழுந்துசெல்லவிருந்த வேளையில் தாங்கள் ஒருகேள்வி எழுப்பினீர்கள். எனக்கு அந்தக் கேள்வி மிகவும் பிடித்திருந்தது. அதற்கு பாராட்டு தெரிவிக்கும்வகையில் எனது பேத்தி என நினைத்தே நான் தங்கள் கன்னத்தைத்தட்டினேன்.

40 ஆண்டுகாலமாக நானும் பத்திரிகையாளராக இருந்தேன் என்ற முறையிலேயே உங்களது பணித் திறனைப் பாராட்டும் வகையிலேயே அவ்வாறு செய்தேன்.உங்கள் இமெயில் மூலம், நீங்கள் அந்தசம்பவத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். உங்கள் உணர்வுகளுக்கு மன்னிப்பளித்து நடந்த சம்பவத்துக்காக எனது வருத்ததையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்கு இமெயில்வாயிலாக நீங்கள் உங்கள் பதிலை தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply