பிராமணர்களின் பூணூலை அறுக்க வேண்டும், குடுமியை வெட்ட வேண்டும், ஹிந்து கடவுள்களின் விக்ரகங்களை உடைக்க வேண்டும், உள்ளிட்ட பெரியாரின் கருத்துக்கள் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் அவர்களது கூட்டங்களில் இன்றும்  உயிர்ப்புடன் ஒழித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பெரியாரின் சிலை அகற்றப் படவேண்டும் என்கிற வார்த்தை மட்டும் ஏனோ கடுமையாக கசக்கிறது.  .

பாஜக தேசிய செயலாளர் H.ராஜா முகநூளில் வந்ததற்கு நான் பொறுப்பல்ல, எனது அட்மீன் செய்த தவறு என்றும் கூறிவிட்டார். பதிவையும்  நீக்கி வருத்தமும் தெரிவித்து விட்டார். ஆனால் விநாயகரின்  சிலைகளை உடைக்க வேண்டும், இந்து காவியங்களை, புராணங்களை பற்றி பொய்யுரைக்கும்  பெரியாரின் சித்தாந்தங்கள், இனியாவது  தமிழகத்தில் ஒழிக்காமல் இருக்குமா?.

இது பெரியார் மண், பெரியார் மண் என்று அடிக்கடி கூறும் அவரது கொள்கையில் வந்த திராவிடக் கட்சிகள் செய்தது என்னவோ ஊழலும், கனிமவள கொள்ளையும் தான். பெரியார் சமூக சீர் திருத்தங்களையும் செய்தார். பெண் விடுதலை, மூடநம்பிக்கை, ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்று வழியுறுத்தினார். அதில் பல வெற்றிகளையும் கண்டார். ஆனால் சமூக  சீர் திருத்தங்களை எல்லாம் அவர் மட்டுமே செய்தார் என்று ஒரு கூட்டம் தவறான வரலாற்றை உருவாக்க முயல்கிறது. சாதிய ஒழிப்பு, பெண் விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்ட பல சீர் திருத்தங்கள் ஆதிசங்கரர் காலம் தொட்டு விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன்ராய், திரு.வி.க, பாரதி, முத்துலெட்சுமி, அம்பேத்கார், , காந்தியடிகள் உள்ளிட்ட பலரால் பல்வேறு கால கட்டங்களில் வலியுறுத்த பட்டது.

உதாரணமாக வைக்கம் போராட்டத்தை  கேரள சீர்திருத்தவாதியும் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி. கே. மாதவன் முன்னெடுத்தார். அன்னி பெசண்டின் உதவியையையும் பின்னர் காந்தியின் உதவியையும் நாடினார். போராட்டத்தைக் காந்தியின் வழிகாட்டலுடன் (சத்தியாக்கிரகப்) அறப்போராட்டமாக முன்னெடுத்தார்.

வினோபா பாவே அதில் பங்கெடுப்பதற்காக வந்தார். கேரளத்தில் காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கேளப்பன், கெ.பி.கேசவமேனன், இ.எம்.எஸ், ஏ.கே.கோபாலன் போன்றவர்களும் பங்கெடுத்தார்கள். தமிழகத்தில் இருந்து ஈ.வே.ரா அவர்களும்,கோவை அய்யாமுத்து அவர்களும், எம்.வி.நாயுடு அவர்களும் பங்கெடுத்தார்கள். போராட்டத்தில் ஈ.வே.ரா முக்கியமான பங்கு வகித்து சிறைசென்றார். வைக்கம் போராட்டம் மேலும் பல மாதங்கள் நீடித்தது. நடுவே போராட்டம் வலுவிழந்தபோது காந்தியும், ஸ்ரீ நாராயணகுருவும் நேரில் வந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்கள்.

கேரளத்தில் மாபெரும் சமூக சக்தியாக விளங்கிய நாராயணகுரு பங்கெடுத்து நடத்திய ஒரே போராட்டம் இதுவே. கடைசியில் வெற்றி கிட்டியது. அமைதி ஒப்பந்தத்தில் காந்தி சார்பில் தேவதாஸ் காந்தியும் போராட்டக்குழு சார்பில் ராஜாஜியும் கையெழுத்திட்டனர்

பின்னர் இப்போராட்டம் அனைத்துக் கேரள கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவெங்கும் ஆலயப்பிரவேச இயக்கமாகக் காந்தியால் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் வைக்கம் வீரர் என்ற பெயரை தங்களுக்கு தாங்களே வைத்துக் கொண்டு, இந்த போராட்டத்தின் முழு வெற்றியையும் தனதாக்கி, தவறான  வரலாற்று புனை கதைகளை உருவாக்கியவர்கள்  இந்த திராவிட இயக்கத்தினர்.

எனவே சீர் திருத்தங்கள் அனைத்துக்கும் பெரியார் மட்டுமே காரணம் என்ற கருத்து ஏற்புடையது அல்ல. அதே நேரத்தில் மற்ற சமூக சீர்திருத்த வாதிகள் எல்லாம், இந்து மதத்தில், நமது கலாச்சாரத்தில்  இடையில் புகுந்த ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை, மூட நம்பிக்கையை, பெண் அடிமை தனத்தை மட்டுமே  ஒழிக்க முற்பட்டனர். ஆனால் பெரியாரோ இவைகளுடன் சேர்த்து, இந்து மதத்தையும், கலாச் சரத்தையும் ஒழித்துக்கட்ட முற்பட்டார்.

உன்னைப் பறையனாய்ப் படைத்தார்; அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார்; என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்” என்று கடவுள்மேல் பழிபோடும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் கடவுள் ஒழிக்கப்பட வேண்டும்” என்கிறார் பெரியார்.

சாதி சண்டைகள் போடுவதில் பயனில்லை..சாதி பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி மேலே உள்ளவர்களைக் கீழே இழுப்பதன்று; கீழே உள்ளவர்களை மேலுள்ளவர்களின் நிலைக்கு உயர்த்துவதே.

லட்சியத்தின் மேல்படியில் பிராமணன், கீழ்ப்படியில் சண்டாளன். சண்டளானை பிராமண நிலைக்கு உயர்த்துவதே நமது வேலை. நீங்கள் கஷ்டப்படுவதற்குக் காரணம் உங்கள் தவறே. ஆன்மிக துறையையும், சமஸ்கிரத கல்வியையும் அலட்சியம் செய்யும் படி உங்களுக்கு யார் சொன்னார்கள்? இத்தனை நாள் அலட்சியமாக இருந்து விட்டு, இப்போது மற்றவர்கள் உங்களை விட அதிகமூளையும், ஊக்கமும், திறமையும் உள்ளவர்களாக இருப்பது குறித்து எரிச்சலடைவதில் யாது பயன்?

பிராமணன் பெற்றிருக்கும் அறிவுச் செல்வத்தை அடைவதில் உங்கள் எல்லாச் சக்திகளையும் பயன்படுத்துங்கள். வழி அதுவே.. என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

"வேதகாலத்திற்கு திரும்புங்கள்". உருவ வழிபாடு, குழந்தை திருமணம், பிறப்பின் அடிப்படையிலான ஜாதிமுறை ஏற்க தக்கதல்ல. கலப்பு மணமும், விதவை மறுமணமும் ஆதரிக்க தக்கது என்கிறார் சுவாமி தயானந்த சரஸ்வதி.

இப்படி காலம் காலமாக, பல்வேறு கால கட்டங்களில், சமூக சீர் திருத்தங்கள், பல்வேறு இயக்கங்கள், தலைவர்கள் வாயிலாக, போராட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்களாக  முன்னெடுக்கப்பட்டு  இன்றைய நிலையை அடைந்துள்ளன. எனவே பெரியார் மகாபுருஷர் அல்ல, அதே நேரத்தில் அவரது சிலை அகற்றப்படக் கூடியதும் அல்ல. ஆனால் நமது பண்பாடு, கலாச்சாரத்துக்கு எதிரான அவரது பல கருத்துக்கள் அகற்றப்பட கூடிய ஒன்றே.

நன்றி; தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.