பிரதமர் நரேந்திர மோடி, ‘பெருநிறுவன தொழிலதிபர்களை விமர்சிப்பது நடைமுறையாகி விட்டது. அது சரியல்ல' என்று பேசியுள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஐடி நிறுவன ஊழியர்கள் முன்னிலையில் பேசிய மோடி, ‘நமது நாட்டில் பெருநிறுவன தொழிலதிபர்களையும் கார்ப்பரேட்களையும் விமர்சிப்பது நடைமுறையாகி விட்டது. அது ஏன் அப்படி ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது ஏற்புடையதல்ல. நான் அப்படிச் செய்யமாட்டேன்.

ஐடி பெரு நிறுவனங்கள் சமூகத்துக்காக பல்வேறு சேவைகளை செய்துவருகின்றனர். அவர்களின் ஊழியர்களையும் சமூகத்துக்காக ஏதாவது செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

கார்ப்பரேட் மற்றும் பெரு நிறுவனங்கள் குறித்து  பேசுவது இது முதல் முறையல்ல. இதற்குமுன்னர் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி, ‘நான் கார்ப்பரேட் நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசிப்பதற்கும் பேசுவதற்கும் பயப்படவில்லை. எனது எண்ணம் தெளிவாக இருக்கிறது. நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்வதுதான் எனது நோக்கம்' என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply