பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி பேனர்வைப்பதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர், ” பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க மத்திய அரசின் சார்பில் தான் பேனர் வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், பேனர் வைப்பதற்கும் பாஜகவிற்கும் எந்ததொடர்பும் இல்லை எனவும் பேனர் வைப்பதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.