அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடுமுழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டத்திலும் 10 இடங்களில் தூய்மைபணி நடந்தது. வடசேரி காந்தி பார்க்கில் மத்தியமத்திரி பொன்.ராதா கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பொன்.ராதாகிருஷ்ணன் மண்வெட்டி மூலம் குப்பைகளை சேகரித்தார். பின்னர் கைகளால் குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தினார்.

 

முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

 

கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்த முயற்சித்து செல்போனில் பேசியது முதல்முறை போன்று தெரியவில்லை. பல ஆண்டுகளாக இதுபோன்று அவர் ஈடுபட்டு வந்திருக்கலாம் என நினைக்கிறேன். எனவே இதன் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். இது போன்று அந்த ஒருகல்லூரியில் மட்டும்தான் நடந்ததா? அல்லது வேறு கல்லூரி மாணவிகளுக்கும், வேறு பெண்களுக்கும் இதுபோன்ற தொல்லை நடந்திருக்கிறதா? என்பதையும் ஆய்வுசெய்வது அவசியம். மாணவிகளை பாலியலில் ஈடுபட முயற்சித்த கல்லூரி பேராசிரியை மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவரை உடனே பணி நீக்கம்செய்ய வேண்டும்.

 

காவிரி பிரச்சினை சுமார் 100 ஆண்டுகளாகவே இருக்கிறது. ஆனால் தற்போது வெறும் 100 நாட்களில் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றால் எப்படி முடியும்? காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்த பிரச்சினையையும் உருவாக்கியதே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான். ஆனால் தற்போது அவர்கள் தீர்வு கேட்டும் போராடுகிறார்கள்.

 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் கேட்க மாட்டோம், பிரதமர் நரேந்திர மோடி கூறுவதையும் கேட்கமாட்டோம் என்று சொல்லக்கூடிய அரசு, கர்நாடகாவில் இருந்து அகற்றப்படவேண்டும். எனவே கர்நாடகாவில் வருகிற சட்ட சபை தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும். பா.ஜனதா வெற்றி பெற்றால்தான் தமிழகத்துக்கு நன்மை நடக்கும்.

 

சமூக வலை தளங்களுக்குள் பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஊடுருவி எந்த தலைவர்களாக இருந்தாலும் கொச்சைப் படுத்தி கருத்து வெளியிடுகிறார்கள். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வதற் காகவே அவர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங் களுக்குள் ஊடுருவுவதை தடுப்பது அவசியம்.

 

கவர்னர் பன்வாரிலால் புரோகித் மிகவும் திறமையாக செயல்பட்டுவருகிறார். ஆனால் அவரை கொச்சைப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் முயற்சிக் கிறார்கள். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *