பேஸ்புக்கில் உலகின் மிகவும்பிரபலமான அரசியல் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி அறிவிக்க பட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜக வெற்றியை தேடிதந்த விஷயங்களில் முக்கியமானது நரேந்திர மோடியின் நவீன சிந்தனைகள். சமூக வலைதளங்களை அதிகம் பயன் படுத்துபவரான மோடி, அதில் அதிகம் உலவும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது மோடி அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவுக்குவரும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் பேஸ்புக்கில் உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி அறிவிக்கபட்டுள்ளார். அவரது தனிப்பட்ட பக்கத்தில், சுமார் 4.3 கோடிக்கும் அதிகமாக லைக்குகளும், அலுவலகப்பக்கதில் 1.3 கோடி லைக்குகளும் பெற்றுள்ளார் அவர்.

அவருக்கு அடுத்தப்படியாக, 2.3 கோடி லைக்குகளுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஜோர்டன் நாட்டுராணி ராணியா, 1.7 கோடி லைக்குகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.

பிசிடபுள்யூ எனும் நடத்திய ஆய்வின் மூலன் இது தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு பேஸ்புக்கில் உலக தலைவர்கள் எனும் தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *