இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசி குமார் வியாழக்கிழமை மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். இந்த சம்பவத்துக்கு இந்துமுன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
கோவை மாநகர் இந்து முன்னணி செய்திதொடர்பாளர் சசிகுமார், இவர் வியாழக்கிழமை இரவு 11.30 மணி அளவில், சுப்பிரமணிய பாளையத்திலுள்ள தனது வீட்டிற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, தாக்குதலில் ஈடுபட்டனர். அரிவாளால் பலஇடங்களில் அவரை வெட்டினர். இதில் சசி குமார் நிலைகுலைந்து கீழேசரிந்தார்.மர்ம கும்பல் தப்பி சென்றது. 
 
8 இடங்களில் வெட்டுகாயங்களுடன் ஆபத்தான நிலையில், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி இறந்துபோனார். சசிக் குமார் இறந்த தகவல் அறிந்த இந்து முன்னணியினர், மருத்துவ மனைக்கு திரண்டுவந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து சசிக் குமாரின் உடல் பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டது.
 
இதுகுறித்து இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மற்றும் மாநில நிர்வாகி முகாம்பிகை மணி ஆகியோர் குறிப்பிடும் போது, 'போலீஸ் அஜாக்கிரதை யினாலேயே எங்கள் உண்மைத் தொண்டர் ஒருவரை பறிகொடுத் துள்ளோம். அவருக்கு ஏற்கெனவே கொலைமிரட்டல் வந்தது. அதை உத்தேசித்து போலீஸ் பாதுகாப்பும் (பிஎஸ்ஓ) போடப்பட்டிருந்தது.அதை சமீபத்தில்தான் போலீஸார் விலக்கிக்கொண்டனர். அதைத்தொடர்ந்தே இந்த கொலை நடந்துள்ளது!' என்று  காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன் ஒசூரில் விஸ்வ இந்து பரிஷத் செயலாளர் சூரி என்பவர் கொலை செய்யப்பட்டார். அதையடுத்து திண்டுக்கல்லில் இந்து முன்னணியின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் கணேஷ் என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.

Leave a Reply