பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிமிதீவிரவாதிகள் கொல்லப்பட்டது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் ஏற்கனவே கைதான ஐ.எஸ். தீவிரவாதிகளின் வாக்கு மூலம் மிகவும் கவனிக்கத் தக்கது. இதுதெரிந்தும் வாக்குவங்கிக்காக தீவிரவாதிகளின் செயலுக்கு தமிழக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவிக்காமல் உள்ளன. இது தேசநல்லதுக்கு நல்லதல்ல.

பொதுச் சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல. இஸ்லாமியபெண்களின் பாதுகாப்புக்கு இந்த சட்டம் அவசியமானது. இந்தசட்டம் குறித்து காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பு கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. தமிழக இடைத்தேர்தல் மூலம் அரசியலில் எந்தமாற்றமும் ஏற்படபோவதில்லை. மத்திய பாரதீய ஜனதா அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்ததேர்தல்களில் மக்கள் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply