*பொய்யர்கள் நிறைந்த மூடர்கூடம் காங்கிரஸ் கட்சி! அமித் ஷா மீது சுமத்திய அபாண்ட பழி சுக்குநூறாக உடைந்தது*

சமீபகாலமாக காங்கிரஸ் கட்சி ஆற்றொன்னா தவிப்பில் மிதக்கிறார்கள். ஊழலால் திளைத்திருக்கும் இக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரே ஜாமீனில் வெளியே உலவி கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் அழுக்கை மறைக்க மோடிஜியின் மீதும், பா.ஜ.க கட்சியின் மீதும் ஊழல் நிறைந்தவர்கள் என்ற சாயத்தை பூச முனைவது தான் இங்கு வேடிக்கையே! தேர்தல் என்னும் ஆயுதம் கொண்டு ஒட்டு மொத்த நாடும் இந்த கரைப்படிந்த கட்சியை ஒட்டுமொத்தமாக நிராகரித்ததே அவர்களின் இந்த உந்துதலுக்கான காரணம். உள்ளூர் கட்சிகளுடன் பல வண்ணத்தில் இவர்கள் கூட்டணி வைத்த போதும் காங்கிரஸின் எழுச்சிக்கான எந்தவொரு அடையாளமும் பாவம் அவர்களுக்கு தென்படவில்லை.

சீரற்றதன்மையுடன், ஆவணங்கள் ஏதுமின்றி இந்த ஆட்சியின் மீதும், பா.ஜ.க-வின் மீதும் ஊழல் கதைகள் புனைவதில் மன்னனாக இருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆனால், அவையனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உந்துதல் அதிகமாகி, தற்போது அவர்களின் எல்லையை கடந்து அமித் ஷா அவர்களின் மீதும் குற்றம் சுமத்தியுள்ளனர், ஆனால் இந்த முறை, அவர்கள் உருவாக்கியிருக்கும் கதை முன்பு புனைந்த கதைகளை காட்டிலும் நகைப்புக்குரியதாகவும் பலகீனமானதாகவும் இருப்பது தான் சுவாரஸ்யமே!!

பா.ஜ.க-வின் தலைவராக இருக்கும் அமித் ஷா, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வைப்பு நிதிகளை அதிகம் ஈர்த்த வங்கி ஒன்றின் இயக்குனராக இருந்ததாக இவர்களாகவே ஓர் ஊழல் கதையை கற்பனை செய்துவிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நவம்பர் 2016-இல் பழைய ₹500 மற்றும் ₹1000 நோட்டுகள் சட்டரீதியான ஒப்பந்தகளில் செல்லாது என அறிவித்த மறுகனம் முதலே அந்த கற்பனை கதையை மையமாக வைத்து தவறான செய்திகளை பரப்ப துவங்கிவிட்டது காங்கிரஸ்.

இந்த விஷயத்தில் மிகவும் அபத்தமான குற்றச்சாட்டே, தனி நபரோ அல்லது தனி நபர் குழுவோ வங்கியில் இருப்பு நிதியை, அதன் அளவை கணக்கில் கொள்ளாமல் வைப்பார்களேயானால் அவர்கள் தவறான வழிகளில் ஈடுபடுகிறார்கள் மற்றும் அதில் மோசடி நடக்கிறது என்று அர்த்தம் என சொல்வது தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக, கையில் பணம் வைத்திருப்பதென்பது ஒரு சாதரண நிகழ்வாக இருந்தது. அப்போது கையில் வைத்திருந்த பணம் இந்த நடவடிக்கைக்கு பின் சட்டபூர்வமாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. இது எந்தவகையிலும் ஊழலை குறிப்பதில்லை.

அமித் ஷா அவர்கள் இயக்குனராக இருக்கும் அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி தான் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. இதில் காங்கிரஸால் வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவெனில்,

நடிகை திவ்யா ஸ்பந்தனா (நடிகை ரம்யா என்று இங்கு அறியப்படுபவர்) என்பவர், இந்த அபத்தமான குற்றச்சாட்டை டிவிட்டர் கமெண்ட் மூலமாக ஒரு அடி முன்னெடுத்து சென்றார். இவர் வெளிப்படையாக டிவிட்டரில் எழுதியது என்னவெனில் “அமித் ஷா அவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மாபெரும் தொகையான ₹745 கோடியை பெற்றிருக்கிறார்” என எழுதியுள்ளார். இது முட்டாள்தனமான குற்றச்சாட்டு. ₹745 கோடி என்கிற இந்த தொகை முழுவதும் 1.60 இலட்சம் வாடிக்கையாளர்களால் செலுத்தபட்டதே தவிற இதை அமித் ஷா தனிப்பட்ட முறையில் செலுத்தவில்லை.

இந்த அபத்தமான டிவிட்டின் ஒரே நோக்கம் மிகவும் மூடத்தனமானது. இந்த ஒப்பீட்டின் மூலம் ராகுல் காந்தியை அதீத புத்திசாலியாக நிறுவ முனைகிறார்கள்.

NABARD வங்கி அதனுடைய அறிக்கையில், “NABARD வங்கி அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 100% ஆய்வை மேற்கொண்டு முடித்துள்ளது. இந்த வங்கி, பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுக்களை பெற்றுக் கொள்ளும் போது ரிசர்வ் வங்கியின் KYC(வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுதல்) வழிமுறைகள் அனைத்தையும் மிகச்சரியாக கடைப்பிடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABARD வழங்கிய ஆய்வறிக்கையின் படி, நடப்பு வழிமுறைகள் கேட்டு கொள்ளப்பட்ட போதெல்லாம் இந்த வங்கி பண பரிவர்தனை ரசீதுகளையும் (CTRs) மற்றும் STR களையும் FlU-இந்தியாவிற்கு தேவைப்படும் வேளைகளிலெல்லாம் வழங்கியுள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்களால் செலுத்தப்பட்ட பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளின் விகிதம் மற்ற வங்கியுடன் சராசரியாக ஒப்பிடுகையில் குறைவானதாகவே உள்ளது.

நிறைவான ஆய்வின் அடிப்படையில், அஹமதாபாத் மற்றும் ராஜ்கோட் ஆகியவை உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள உரிய மாவட்ட கூட்டுறவு வங்களிடம் இருக்கும் பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளை ஆர்.பி.ஐ ஏற்றுகொண்டுள்ளது. மேலும் அதற்குரிய மாவட்ட கூட்டுறவு வங்கி கணக்குகளில் தேவையான இடத்தில் வரவு வைத்தும் இருக்கிறது.

இதன் மூலம் அனைத்து விதிமுறைகளும் சரியாக பின்பற்றுள்ளன என்பது தெளிவாகிறது. அஹமதாபாத் மற்றும் ராஜ்கோட் ஆகிய இரண்டு பகுதிகளிலுமே ஆய்வுகள் நடந்து முடிந்துள்ளன.

ராகுல் காந்தியும் அவருடைய குழுவும் இது போன்ற வெற்று வேலைகளில் ஈடுபடுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. நிஜத்தில் அவருக்கும் அவர் கட்சிக்குமான உடனடி தேவை என்ன என்பதாவது அவருக்கு தெரியுமா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. அமித் ஷா அவர்களின் மகன் ஜெய் ஷா குறித்தும் காங்கிரஸ் தவறான செய்திகளை பரப்புகிறது காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய மூடர் கூடம்.

ராகுல் காந்தி மற்றும் தவறாக வழி நடத்தும் மற்ற தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மூடர் கூடங்கள் உருவாக்கிய மற்ற கதைகளை போன்ற மற்றொரு கற்பனை காவியம் இந்த குற்றச்சாட்டு. இவர்கள் ஒரு பொய்யை நிரூபிக்க தவறினால், மற்றொன்று, பின் வேறொன்று என தாவி கொண்டே செல்வார்கள்.

இந்த செய்தியை பூதாகரமாக்க துடித்த பல்வேறு தமிழ் ஊடகங்கள் தற்போது இது முழுக்க முழுக்க பொய் குற்றச்சாட்டு என்பதை அறிந்து செய்வதரியாது தவிக்கின்றனர். விகடனில் எழுதப்பட்டு கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. பிறகு, 100% பொய்யை நீக்கி தானே ஆக வேண்டும்?

நீங்கள் மோசடி பேர்வழிகளுடனும், பொய்யர்களுடனும் பிழைப்பு நடத்த துணிந்துவிட்டால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விட எதை சொல்லாமல் விட்டிருக்கிறார்கள் என்பதில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.

Leave a Reply