கடந்த 5 ஆண்டுகளில், இந்தியா இங்கிலாந்து இடையிலான வர்த்தகத்தில் எந்தமாற்றமும் ஏற்படவில்லை. இங்கிலாந்தில் அதிகமுதலீடு செய்த நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. பொருளாதாரத்தில், இந்தியா வேகமாக வளர்ந்துவருகிறது.

சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவும், இங்கிலாந்தும் தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சோலார்சக்தி குறித்து, சுத்தமான எரி சக்தி ஆராய்ச்சி மற்றும் ஆய்வுமையம் அமைக்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்தமாநாடு, இருநாடுகளுக்கு இடையேயான அறிவியல் அறிவு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசெல்லும். ஐரோப்பாவிற்கு வெளியே முதல் சுற்றுபயணமாக தெரசா மே இந்தியா வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. பாதுகாப்புதுறை, உற்பத்தி மற்றும் வான்வெளித் துறையில், இந்தியா அன்னிய முதலீட்டு விதிகளை தளர்த்தியதில் இங்கிலாந்திற்கு அதிகபலன் அளிக்கும்

டில்லியில் இந்தியா இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான அறிவியல் தொழில்நுட்ப மாநாடு நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியது,

Leave a Reply