பொருளாதார கொள்கையில் முன்னேற்றப்பாதை’ என்னும் தலைப்பில் நிதி ஆயோக் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், 40-க்கும் மேற்பட்ட நிதித் துறை நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் பங்கேற்றனர். அவர்களிடம், பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டறிந்தார். வேலை வாய்ப்பு, வேளாண்மை, நீர் வள மேலாண்மை, ஏற்றுமதி, கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக அந்ததுறைகளை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்த கருத்துகளுக்காக பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) ராவ் இந்தர்ஜீத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் மற்றும் அமைப்பின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஜூலை 5-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமான் பட்ஜெட் தாக்கல்செய்ய உள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மோடி அரசின் முதலாவது பட்ஜெட் இதுவாகும்.

Comments are closed.