கடந்த 100 நாளில், காஷ்மீர் சிறப்புசட்டம் ரத்து, வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது.  ஜன சங்கம் ஆக இருந்தபோதும், பாஜக , துவங்கிய பின்னரும், காஷ்மீர் சிறப்பு சட்டத்துக்கு எதிராகபேசி உள்ளோம். சிறப்புசட்டம் ரத்து குறித்து, ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் கூறியுள்ளோம். இந்த சட்டப்பிரிவால் மாநிலத்திற்கு எந்தபலனும் கிடைக்க வில்லை. வளர்ச்சியும் தரவில்லை.

அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். சிறப்புசட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னர், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளது. உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சிபெறும்.

சிறியவங்கிகள் இணைப்பால் நாடு வளர்ச்சி அடையும். நாட்டின் பொருளாதாரம் அடுத்தகட்டத்திற்கு செல்லும். வங்கிகள் இணைப்பு குறித்து, அந்தந்த வங்கிகள் நிர்வாகமே முடிவு செய்யவேண்டும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைய, வங்கிகள் இணைப்பு உதவும். பொருளாதாரம் வேகமாகவளர ஜிஎஸ்டி உதவுகிறது. முத்தலாக் உள்ளிட்ட பெண்கள் உரிமை மீட்டெடுக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சமஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இரண்டு ஆண்டில், 1.95 கோடிவீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்படும். 2022க்குள் , அனைவருக்கும் மின்சாரம், குடி நீர் கிடைப்பதை உறுதிசெய்வோம். ஏழைகளுக்கு தரமான சிகிச்சைகிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் குறைந்த செலவில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்ததிட்டத்தின் கீழ் இதுவரை 100 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.100 கோடி பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. 16 ஆயிரம் மருத்துவமனைகள் இணைக்கப் பட்டுள்ளது. விவசாயிகள் நிதியுதவி அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ரூ.6 ஆயிரம் நிதியுதவி, ஆண்டுக்கு 3 தவணையாக வழங்கப்படுகிறது.

முறைகேடுகளுக்கு வழிவகுககும் விதத்தில் இருந்த தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. அவசியமற்ற 58 சட்டங்கள் திரும்ப பெறப் பட்டுள்ளன. இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம்கோடி ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பிட் இந்தியா திட்டத்தின் கீழ் உடற்பயிற்சிசெய்து ஆரோக்கியத்தை பராமரிக்க ஊக்கம் அளிக்கப்படும்.
உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. சந்திரயான்- 2 திட்டம் 99.9 சதவீத வெற்றிபெற்றுள்ளது. முழுமையாக வெற்றிபெற மத்திய அரசு உதவும். இஸ்ரோவின் திட்டங்களுக்கு மத்தியஅரசு முழு ஆதரவு அளிக்கும். உள்கட்டமைப்பு துறையில் 100 கோடி முதலீடுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்சார கார் விற்பனையை அதிகரிக்க சலுகை வழங்கப்படுகிறது.. பல காரனங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகன உற்பத்தி துறை சந்திக்கும் பிரச்னைகள் குறித்து நிதித்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. புதியவாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். மந்தநிலை குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

பிரதமராக மோடி இரண்டாவது முறை பதவியேற்றபின்னர், மத்திய அரசு 100 நாளில்செய்த பணிகள் குறித்து சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்தபேட்டி.

Comments are closed.