பொருளாதார வளர்ச்சி ஏற்பட இந்தியாவில் தனியார் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். கடன் மீட்பு தொடர்பான கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்று பேசியதாவது: மற்ற எந்த நாட்டையும் விட இந்தியாவில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு நல்ல வருமானம் திரும்பகிடைக்கிறது.

உள்ளூர் முதலீடுகள் தொடர்ந்து சவாலாக உள்ளது. பொருளாதாரவளர்ச்சி ஏற்பட தனியார் முதலீட்டை பலவழிகளில் அதிகரிக்க வேண்டும். இதற்காக வங்கித்துறை அவர்களுக்கு கடன்கொடுத்து உதவ வேண்டும். மேலும் வங்கிகள் கொடுத்த கடன்களை வசூலிப்பதையும் தீவிரப்படுத்தவேண்டும். கடந்த சில ஆண்டுகளில் பொதுத் துறை முதலீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியா அந்திய முதலீட்டு இலக்கை அதிகரிக்க வேண்டிய திருப்பதால் இதற்கான வழி முறைகளை எளிதாக்க வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பேசினார்.

Leave a Reply