மக்களவைத் தேர்தலில் இன்னமும் 2 கட்ட வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில்,  போட்டியில்இருந்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் விலகிவிட்டன, பாஜக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மக்களவைத் தேர்தலில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 6-ம் கட்டதேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஹரியாணா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி ஹரியாணாவில் பிரதமர் மோடி இன்று தீவிரபிரச்சாரம் மேற்கொண்டார். ஹரியாணா மாநிலம் பதேபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

2014-ம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் மக்களின் ஆசியுடன் பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி மக்களின் ஆதரவை எங்கள்அரசு பெற்றுள்ளது.

பாஜக கூட்டணியுடன் காங்கிரஸ் கூட்டணி மோதிபார்த்து விட்டது. எப்படியாவது ஒரு ‘கிச்சிடி’ அரசை அமைத்துவிட வேண்டும் என காங்கிரஸ் கூட்டணி விரும்பியது. ஆனால் அதற்கானவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

5 கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் இப்போதே போட்டியில் இருந்து காங்கிரஸ் கூட்டணி விலகிவிட்டது. தேர்தலில் வெற்றிபெறுவது இயலாது என்பதை காங்கிரஸ் கூட்டணி புரிந்துகொண்டு விட்டதால் இன்னுமும் 2 கட்டத் தேர்தல் நடைபெறும் முன்பாகவே போட்டியில் இருந்து விலகிக்கொண்டு விட்டன.

இதனால் மீண்டும் பாஜக அரசமைப்பது உறுதியாகி விட்டது. மீண்டும் மோடி அரசு அமைவது உறுதி. மக்களுக்காக எங்கள் அரசு தொடர்ந்து பணியாற்றும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply