போனி புயல் ஒடிசாவை நெருங்கிவருவதால் கடலோர பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் 10 லட்சம் மக்களை அங்கிருந்து வெளியேற்ற மத்திய மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன.
புயல்காரணமாக மே 4 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அங்கு 879 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

போனி புயலால் கன மழை முதல் மிககனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் முன்னிச்சரிக்கை கருதி ஹவுரா – புரி இடையேயான 43 ரயில்களின் சேவை ரத்துசெய்ய பட்டுள்ளது. புரியில் இருந்து தென்னிந்தியாவிற்கு செல்லும் 17 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோனி புயல் மிகவும் பயங்கரமான செயலாகவே பார்க்கப்படுகிறது. இது 170 கிமீ வேகத்திலிருந்து 200 கிமீ வேகத்தில் சுழல் காற்றாக வீசலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைப்போன்ற ஒரு பயங்கரமான புயல் கடந்த 2008ஆம் ஆண்டு மியான்மர் நாட்டை தாக்கியது, இதில் சுமார் 1.25 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.
இருப்பினும் அன்றைய காலகட்டத்தில் மியான்மார் அரசு இந்த அதிவேக புயலை கணிக்கத் தவறிதன் காரணமாகவும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததன் காரணமாகவும் இத்தகைய உயிர்களை எதிர்கொண்டது.

 

ஆனால் இன்று இந்தியா வானியல் தொழில்நுட்பத்தில் கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றதன் காரணமாக, இன்று இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே துல்லியமாக கணிக்கிறது, இதன் மூலமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின மூலம் உயிர் பலிகளையும் தடுத்துவிடுகிறது.சமீபத்திய உதாரணமாக தமிழகத்தை தாக்கிய கஜா புயலை எடுத்துக்கொள்ளலாம்.

மத்திய அரசு மிகத்துள்ளியமாக புயலின் வேகம் மற்றும் அதன் விளைவுகளை கண்காணித்ததன் காரணமாகவே ஆயிரக்கணக்கான உயிர் பலிகளை தடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று போனி புயலையும் இந்தியா மிக சாதுரியமாக எதிர்கொள்ளும்.

Leave a Reply