ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து போராட்டம் கைவிடப் பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் முன்னிலையில், மத்தியஅரசின் நிலை குறித்தும், மக்களுக்கு ஆதரவாக அரசின் செயல்பாடு பற்றியும் எடுத்துரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், மக்களின் விருப்பத்தை ஏற்கனவே மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாகவும், போராட்டக்காரர்கள் அவரை சந்தித்து தங்கள்கருத்துக்களை கூற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply