மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர்.

தேசதந்தை என்று அழைக்கபடும் மகாத்மா காந்தி உயிர் நீத்த நாளான இன்று (ஜனவரி30) நாடுமுழுவதும் 67வது தியாகிகள் தினமாக அனுசரிக்க படுகிறது.

டெல்லியில் உள்ள ராஜ் காட்டில் உள்ள அவரது சமாதியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.  எல்.கே.அத்வானி, சோனியாகாந்தி,  மன்மோகன்சிங்,  ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

காலை 11 மணி அளவில் தியாகிகளை நினைவு கூறும் விதமாக அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply