ஆப்பிரிக்கா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

டர்பன் நகரில் உள்ள பென்ட்ரிச் ரயில் நிலையத் திலிருந்து Pietermaritzburg ரயில் நிலையம்வரை, மகாத்மா காந்தி பயணித்தது போன்ற ரயிலில் பயணித்து, அவரது நினைவுகளில் மூழ்கினார்.

பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய மோடி,  மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவுகளும் சிந்தனைகளும் வருங்கால சந்ததி யினருக்கு உத்வேகம் என குறிப்பிட்டார்.

பின்னர் தென்ஆப்பிரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, டர்பனில் இருந்து தான்சானியா புறப்பட்டுச்சென்றார். டரஸ் சாலம் விமான நிலையத்தில் அவருக்கு அந்நாட்டுசார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

One response to “மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவுகளும் சிந்தனைகளும் வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம்”

  1. Admin says:

    மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவுகளும் சிந்தனைகளும் வருங்கால சந்ததி யினருக்கு உத்வேகம்

Leave a Reply