மகாபாரத காலத்தில் அணுஆயுதம் இருந்ததா? ஜெர்மானியர் இந்தியாவில் இருந்து அக்கால நுட்பத்தை திருடினார்களா? என சிலர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். பெரியாரின் சீடர்கள் என சொல்பவர்கள் அப்படித்தான், அப்படி சொன்னால்தான் உலகம் தங்களை பகுத்தறிவாளர் என சொல்லும் என நினைத்துகொள்கின்றார்கள்

 

உண்மை என்ன?

 

ஜெர்மானியர்கள் 1800க்கு பின் இந்தியாவில் சுற்றியது ஒன்றும் ரகசியமல்ல, பிரிட்டனும் பிரான்சும் ஆளும் வர்க்கம் என இந்தியாவின் தங்கத்தை சுரண்டியபொழுது ஜெர்மானியர் இந்திய அறிவு திருட்டில் ஈடுபட்டனர்

 

அதுவும் தென்னகத்தில் பெரும் ஆராய்ச்சி செய்தனர் தஞ்சை சரஸ்வதி மஹாலில் ஓலை சுவடிகளில் பெரும்பாலானவற்றை மொழிபெயர்த்தனர், அவ்வளவு ஏன் பாழடைந்து கிடந்த தஞ்சை கோவிலையே அவர்கள்தான் படித்து, கல்வெட்டினை படித்து அதனை கட்டியது ராஜராஜன் என சொன்னார்கள், தஞ்சை கோவிலில் ஜெர்மானியர் ஆராய்ச்சி ஏராளம்

 

தமிழன் அன்று அதனை கண்டுகொள்ளவே இல்லை, அது ஒரு சபிக்கபட்ட இடம்போல புறம் தள்ளபட்டிருந்தது, நாம் அதன் சிறப்பினை கொண்டாட ஆரம்பித்தது எல்லாம் ஜெர்மானியன் சொன்ன பிறகுதான், அதன் அதிசயத்தை அவனே நமக்கு விளக்கினான் மண்ணையும் விடவில்லை, தோண்டினார்கள் ஆதிச்சநல்லூர் அவர்கள் தோண்டி சொன்ன விஷயம், இரும்பினை உருக்கி எக்கு செய்யும் வித்தை ஆதிச்சநல்லூர் மக்களுக்கு தெரிந்திருக்கின்றது, இது 100000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரீகம் என சொன்னது அவர்கள்தான்

 

தேரிகாட்டு மண்ணை பரிசோதித்து அது தாதுமணல் என அன்றே சொன்னது ஜெர்மானியரே, வைகுண்டராஜன், தயா தேவதாசுக்கு எல்லாம் அவர்களே முன்னோடி, ஆனால் கடத்தவில்லை இப்படி ஜெர்மானியர் இந்தியாவில் சுற்றி அலைந்து ஜெர்மனுக்கு கொண்டு சென்ற விஷயங்கள் ஏராளம், மருத்துவ விஷயங்களையும் கொண்டு சென்றார்கள்

 

 அவற்றில் சிலவற்றை ஹில்டரும் ஆராய்ச்சிக்கு எடுத்தான், இந்திய விமான சாஸ்திரா பாதரசம் கொண்டு பறக்கும் சில விமானங்களையும், காற்றினை எரிசக்தியாக கொண்டு பறக்கும் விமானங்களையும் சொன்னது, அவனின் ஆராய்ச்சியில் அதுவும் ஒன்று மகாபாரத பிரம்மாஸ்திரம் போன்று ஒரு குண்டு வேண்டும் என அவன் சொன்னதுதான் அணுகுண்டு, அவனும் அணுகுண்டு ஆராய்ச்சியில் இறங்கினான், ஆனால் அமெரிக்கா முந்திகொண்டது

 

அமெரிக்க முதல் அணுகுண்டு சோதனையின்பொழுது அதன் வெடிப்பினை கண்ட விஞ்ஞானி ஒப்பன் ஹைமர், ஆயிரம் சூரியன் உதித்த்து போன்ற என்ற கீதையின் மேற்கோளை சொன்னது எதனை காட்டுகின்றது? அவர் பாரதம் படித்திருக்கின்றார், அணுவெடிப்பில் கிருஷ்ணைன் விஸ்வரூபத்தை கண்டேன் என சொன்னது அந்த ஜெர்மனில் வசித்து பின் அமெரிக்காவிற்கு தப்பிய அந்த ஓப்பன் ஹைமர் எனும் யூத விஞ்ஞானி

 

அமெரிக்க அணுசக்தி மையத்தின் முகத்தில் இருபப்து நடராஜர் சிலையே, அதாவது அணுவின்றி உலகில்லை, தொடர்ந்த‌ இயக்கமின்றி உலகமில்லை என சொல்லும் தத்துவம்.பல விஞ்ஞான விஷயங்களை மகாபாரதத்திலிருந்து படித்தார்கள், பிரமாஸ்திரம் அணு ஆயுதமாயிற்று, கர்ணனின் நாகஸ்திரத்தில் இருந்து உதித்த ஜெர்மானிய சிந்தனைதான் விஷ வாயு குண்டுகள், அதாவது விஷத்தினை ஆயுதமாக பயன்படுத்தலாம் என சொன்னதும் மகாபாரதம்.

 

பல விஷயங்களை பாரதபோர் உலகிற்கு சொன்னது, பிரம்மாஸ்திர மந்திரம் கர்ணனுக்கு மறந்தது என்பது இன்றைய நவீன கால வாய்ஸ் பார்வேர்டு போன்றது இந்தியாவின் இதிகாசங்களிலிருந்தும், சமஸ்கிருத நூல்கள் தமிழ் நூல்களிலிருந்தும் ஜெர்மன் கற்றுகொண்ட விஷயங்கள் உண்டு, பின் அவனிடமிருந்து அமெரிக்காவும், ரஷ்யாவும் பெற்றுகொண்டன‌

 

அவை எல்லாம் பொய் கட்டுகதை என சொல்லும் பெரியாரின் சீடர்கள் சொல்லட்டும், அவர்கள் விருப்பம்.  புராணங்களில் சில வியத்தகு அறிவும் புதைந்திருக்கின்றது, திராவிட கொள்கைகளில் சில பெரும் அறிவு விஷயங்களை புறக்கணிப்பது சரி அல்ல

 

இன்றும் உலகம் என்ன ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது என நினைக்கின்றீர்கள்? பெண்டகனின் பெரும் குழப்பம் மற்றும் எதிர்பார்ப்பும் ஆராய்ச்சியும் என்ன? பாரததத்தில் பிரமாஸ்திரம் என்பது அணுகுண்டு என்பதில் சந்தேகமில்லை, ஆனால் பாசுபதகனை என ஒரு ஆயுதம் உண்டு

 

அர்ஜூனன் அதனை பெற்றானே அன்றி, யுத்தத்தில் பயன்படுத்தவில்லை, அது எவ்வகை ஆயுதம்? எப்படியான அழிவினை கொடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது, ஏன் பகவான் கண்ணனை தவிர அர்ச்சுனணுக்கே தெரியாது, 

 

ஆனால் பிரமாஸ்திரத்தை விட சக்தி மிக்கது அந்த பாசுபதகனை போன்ற ஒன்றை பெறத்தான் இன்றைய ராணுவ உலகம் சிந்தித்து கொண்டிருக்கின்றது மகாபராதம் பல பெரும் அறிவான விஷயங்களை சொன்ன இதிகாசம், அதனை தெளிவாக படித்த ஜெர்மானியன் சிலவற்றை சாத்தியபடுத்தினான்

 

கிண்டல் செய்யும் பெரியாரின் சீடர்கள் அதனை செய்துகொண்டே இருக்கட்டும், அவர்கள் அப்படித்தான்

 

அணுவிஞ்ஞானி ஒப்பன் ஹைமருக்கும், இந்திய விஞ்ஞானி அப்துல் கலாமிற்கும், இன்றைய பெண்ட்கனின் தலமை விஞ்ஞானி பாசுபத கனைக்கு ஆராய்ச்சி செய்யும் அந்த விஞ்ஞானிக்கு தெரியாததெல்லாம் இந்த பெரியாரின் பேரன்களுக்கு மட்டும் தெரியும் என நம்பிகொள்ளுங்கள்

 

பகுத்தறிவு என்பது கண்ணை மூடிகொண்டு எல்லாம் பொய் என சொல்வது அல்ல….

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.