மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தாபானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார்.

இந்தநிலையில், பிரதமர் மோடியை அனுப்பிவிட்டு அத்வானி, ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி போன்ற யாராவது ஒருவர்  தலைமையில் தேசிய அரசு அமைக்கவேண்டும் என்று மம்தா பானர்ஜி இன்று வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி குறித்து மம்தா பானர்ஜி அப்படி கருத்து சொல்லி இருக்கக் கூடாது என்று மத்திய உள்துறை இணை மந்திரி கிரென் ரெஜிஜூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரெஜிஜூ, “பிரதமர் மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிரதமரை பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை கூறி இருக்கக் கூடாது. இதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள கூடாது” என்று கூறினார்.

Leave a Reply