மக்களின் சந்தேகங்களை தீர்த்தபிறகுதான் தமிழகத்தின் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.


தமிழகம் உள்ளிட்ட நாட்டின், 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று கையெழுத்தாக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் பெட்ரோலியத் துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மக்களின் சந்தேகங்களை தீர்த்தபிறகே நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டம் நிறைவேற்றப்படும். அதேசமயம் திட்டமிட்டபடி ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply