ஏழைகளுக்கு ஏற்றதாக ஜிஎஸ்டி. மாற்றப்படுகிறது என பிரதமர் மோடி பேசினார்.

வளரும் இந்தியா’ என்ற தலைப்பில் ரிப்பளிக் டிவி. சார்பில் மும்பையில் கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

‘வளரும் இந்தியா’ என்ற இருவார்த்தைகள், 130 கோடி இந்தியர்களின் மன உணர்வை எதிரொலிக்கின்றன. இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. சாதாரணா ரிக்ஷா தொழிலாளியும், டீ விற்பவரும் டெபிட்கார்டு பயன் படுத்துகின்றனர். இது நான்கு ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துபார்க்க முடியாதது.

இந்தியாவில் நீர்வழிச்சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது.  180 கி.மீ. வேகத்தில் என்ஜின் இல்லா ரயிலை இயக்க முடிகிறது. ஒரேநேரத்தில் 100 சாட்டிலைட்டுகளை ஏவ முடிகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதுபற்றி பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்.

1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப் பட்டனர். 2014-ல் இரண்டு மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தநிலையில் இப்போது 120 நிறுவனங்கள் உள்ளன. 2014-ல் 50 சதவீத மக்களிடமே வங்கிகணக்கு இருந்தது. 2018-ல் கிட்டத்தட்ட அனைவருக்கும் வங்கிகணக்கு உள்ளது.

2014-ல் 3 கோடியே 80 லட்சம் வரிசெலுத்துவோர் இருந்தனர். 2018-ல் இது 7 கோடியாக உயர்ந்துள்ளது. முன்பு திட்டங்கள் முடங்கியிருந்தன. இப்போது எங்குபார்த்தாலும் பணிகள் நடக்கின்றன. சுதந்திரம் பெற்றது முதல் இந்தியாவில் 450 விமானங்கள் மட்டுமே வாங்கப்பட்டன. ஆனால் கடந்தாண்டு மட்டும் 1000 விமானங்கள் வாங்க ஆடர் தரப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் ஊழலுக்கு காரணமாக குற்றவாளி கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என யாராவது நினைத்தார்களா? அது நடந்தது. வர்த்தகம்செய்ய சிறந்த நாடுகள் பட்டியலில் 142 -வது இடத்திலிருந்து 77 -வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.  முன்பு 66 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. இப்போது அது ஒருகோடியே 20 லட்சமாக உயர்ந்துள்ளது.

மக்களின் தேவைகேற்ப ஜிஎஸ்டி.மாற்றப்படும். 99 சதவீத பொருட்கள் 18 சதவீதவரிக்கு கீழ் கொண்டுவரப்படும். சொகுசு கார், சிகரெட், ஆல்கஹால் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு 28 சதவீதத்திற்கு கீழ் ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.  இளைஞர்கள் பெரிதாக சிந்தித்து செயலாற்ற வேண்டும்.இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply