எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்கும் என எதிர் பார்க்கிறேன். சரக்கு மற்றும் சேவைவரி மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கள் நிறை வேற்றப் படாமல் உள்ளன. மக்களின் நலன் கருதி அந்த மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற எதிர்க் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தில் 300-க்கும் மேற்பட்ட திருத்தங்களை செய்ய எதிர்க் கட்சியினர் கோரியுள்ளனர். அவற்றை அவர்கள் திரும்பபெற்று குடியரசு தலைவர் அலுவலகத்தின் மாண்பை காக்க வேண்டும். அத்துடன் நாடாளுமன்ற அவைகளின் பாரம்பரிய நாகரிகத்தையும் பேணவேண்டும்.

‘மாநிலங்களவை என்பது யோசனைகளின் அரங்கம். மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையில் ஒருங்கிணைப்பு வேண்டும்’ என்று முன்னாள் பிரதமர் நேரு கூறியிருக்கிறார். நேருவின் எண்ணத்துக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அதன்படி, மாநிலங் களவையில் நிலுவையில் உள்ள எல்லா மசோதாக்களையும் நிறைவேற்ற எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடந்தது. அப்போது பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

 

Leave a Reply