இந்திய மக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கிய முன்னுரிமைகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துதெரிவித்துள்ள அமித் ஷா, “கொரோனா வைரசுக்கு எதிரான இந்தபோரில், மக்களின் உயிர்களை காப்பதையே அதன் தலையாயக் கடமையாக மோடி அரசு கருதுகிறது. நாட்டுமக்களுக்கு இன்று ஆற்றிய உரையின் போது இந்த உறுதியை பிரதமர் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார்,” .

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும்வரை எச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட வேண்டாம் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளை தங்களையும் தங்களது குடும்பத்தையும் காத்து கொள்வதற்கான வழிகாட்டும் மந்திரமாக பின்பற்றுமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர், “ஒன்றுபட்ட மற்றும் உறுதி பூண்ட இந்தியாவால் மட்டுமே இந்தப் பெரும்தொற்றை வெல்ல முடியும்,” என்றார்.

 

Comments are closed.