பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலுள்ள ராஜ் பாத்தில் குடியரசு தின முடிவில் பாதுகாப்பு வளைய ங்களை கடந்து கூட்டத்தில் நடந்து சென்று மக்களின் வாழ்த்துகளை பெற்றார்.

பிரதமர் மோடி பாரம்பரிய உடையான பைஜாமா -குர்தா மற்றும் ஜாக்கெட் அணிந்திருந்தார். மேலும், மஞ்சள் மற்றும் சிவப்பு  கலந்த தலைப்பாகையை அணிந் திருந்தார். விஐபிகள் அமரும் இடத்திற்கு சென்ற மோடி அதன் வழியாகவே நடந்து மக்கள் கூட்டம்வரை சென்று கையசைத்தார். மக்கள் பலர் பாதுகாப்பு வேலியைத்தாண்டி பிரதமருடன் கைகுலுக்க விரும்பினார்கள். பலர் தங்களுடைய செல்ஃபோனில் படம் எடுத்துக்கொண்டனர்.

குடியரசுதின விழாவிற்கு பிரதமர் விருந்தினராக வந்திருந்த தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா மற்றும் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சுதந்திரதின விழாவிலும் பாதுகாப்பை மீறிச்சென்று மக்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். சுதந்திரதின நாளின் பேச்சை முடித்துவிட்டுக் கீழே வந்தவர். கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற குழந்தைகளை சந்தித்தார். ஊடகங்கள் அனைத்தும் பரபரப்பாக அந்த தருணத்தை பதிவுசெய்தது. குழந்தைகள் அவரை சூழ்ந்துகொண்டு கை குலுக்கியும் செல்ஃபிகளையும் எடுத்துக்கொண்டனர்.

இன்று காலை பிரதமர் மோடி குடியரசுதின வாழ்த்துகளை மக்களுக்கு ட்வீட் மூலமாக தெரிவித்தார். ராஜ்பாத்தில் நடைபெற்ற விழாக்களுக்கு முன்னர், இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான்ஜோதி நினைவிடத்தில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் 3 அமைச்சர்களுடன் இணைந்துசென்று மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ராணுவ அணிவகுப்பில் விமானப் படையின் சாகசங்களும் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் பிரமாண்டமாக நடைபெற்றது. ராணுவ அணி வகுப்பு முழுவதும் மகாத்மா காந்தியின் 150 பிறந்த நாளை மையப்பொருளாக வைத்து நடைபெற்றது.

Leave a Reply