மக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள்! மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை! பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள்! அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்!

பெரும்பாலான மக்கள் தவறான முடிவு, தவறாண எண்ணங்களின் அடிப்படையிலேயே வாக்களிக்கிறார்கள்!

சிலர் சிந்தனைக்கு சீல் வைத்திருக்கிறார்கள்!

இந்த சின்னத்திற்குத்தான் வாக்களிப்பேன் என்கிறார்கள்!

சிலர் இவன் புதிது இவனுக்கு குடுத்துப்பார்க்கிறேன் என்கிறார்கள்!

வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான், சினிமாக்காரன் நல்லவன் என்றெல்லாம் யோசிக்கிறார்கள்!

எது நடந்தாலும் அது தானாக நடந்தது அதற்கு அரசியலும் அரசும் காரணமில்லை என்று நினைக்கிறார்கள்!

பலருக்கு மாநிலம், தேசம், சட்டம், திட்டம் என்பதெல்லாம் என்னவென்றே தெரியவில்லை!

சிலர் தங்களின் கட்சிகளின் வெறியர்களாக இருக்கிறார்கள்!

சிலர் சிலருக்கு அடிமைகளாக இருக்கவே விரும்புகிறார்கள்!

பலரிடம் சுயநலத்தைவிட வேறு எதுவுமே இல்லை!

நான் மேலே சொன்ன விசயம் MBBS, IAS போன்ற உயர் படிப்பு படித்தவர்களுக்கும் பொருந்தும், இன்றைய படிப்புக்கும் அறிவுக்கும் சம்மந்தம் இல்லை!

பெரும்பாலானவர்கள் லஞ்சம் கொடுப்பவர்களாக லஞ்சம் வாங்குபவர்களாக இருக்கிறார்கள்! அதே சமயம் லஞ்சத்திற்கு எதிராக பேசுவார்கள்! ஆனால் ஓட்டு போடும்போது லஞ்சத்தை ஆதரித்தே வாக்களிக்கிறார்கள்!

மக்கள் அனைவரும் நேர்மையாளர்களாக, அறிவாளிகளாக மாறாதவரை, ஜனநாயகம் கேளிக்கூத்துதான்!

எனவேதான் புகளுக்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும் பலர் அரசியலுக்கு வருகிறார்கள்!

என்னிடம் கோடானுகோடி பணம் இருந்தால் நான் இந்திய அரசியலில் ஒரு முக்கிய தலைவராக மாற முடியும்! நான் நல்லவனாக, தேசப் பக்தனாக, அறிவாளியாக இருந்து அந்த பணம் என்னிடம் இல்லை என்றால் என் அறிக்கை ஒரு துண்டு நோட்டீசில்கூட இடம்பெறாது!

தேசநலனில் அக்கரை உள்ளவர்கள், மக்களை அறிவாளிகளாக நல்லவர்களாக தேசப்பக்தர்களாக மாற்றுங்கள்!

இதுவே இன்றைய தேசியப்பணி!

இது பத்துநாள் பதினைந்துநாள் செய்யக்கூடிய பணியல்ல, இது ஆண்டு முழுமையும் ஆயுள் முழுமையும் செய்யவேண்டியப் பணி!

– தாயகப்பணியில் குமரிகிருஷ்ணன்

Leave a Reply