சசிகலாவும் தினகரன் போன்ற அவரின் உறவினர்களும் தமிழ்நாட்டில் பரம்பரை பணக்காரர்கள் அல்ல! ஜெயலலிதாவின் பணிப்பென்தான் சசிகலா!

     ஜெயலலிதாவுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஊரை கொள்ளையடித்த குடும்பம் அந்த குடும்பம்! திரு. கங்கை அமரனின் சொத்தை பிடுங்கியதைப்போல் பலரது சொத்துக்களை பிடுங்கியவர்கள்! ஜெயலலிதாவால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்கள், அவர் இறந்ததும் பிணத்தைச்சுற்றி நின்றார்கள்! ஆட்சியை பிடித்தார்கள்!

      நாட்டிலுள்ள கேடி, ரவுடி, பொறுக்கி! ஊழல் செய்வோர், ஊழல்செய்து சம்பாதித்தோர், இத்தகையோர் அனைவருக்கும் 2014 மே மாதம் 26 ம் தேதி முதல் கெட்டநேரம் ஆரம்பமானது! அன்றுதான் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றார்!

     காவல்துறை அமலாக்கத்துறை புலனாய்வுத்துறை ஆகியவற்றின் சட்டப்படியான நடவடிக்கைகளில் அரசு தலையிடுவதில்லை! இதுவே பாஜகவின் கொள்கை!

     இந்த கொள்கையின் காரணமாகத்தான் தினகரன்மீது நடவடிக்கை பாய்கிறது!

    இதுவே காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால், இவர்களும் ஒரு ஐம்பதை பெற்றுக்கொண்டு காவல்துறைக்கு கைப்பூட்டு போட்டிருப்பார்கள்!

    இன்று, பாஜக அல்லாத, எல்லா அரசியல் வாதிகளும் ஏன்? ஏன்? என்று கேட்கிறார்கள்! அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை! தினகரன்மீது பரிதாபப்படுகிறார்கள்! பாஜக வின் சூட்சி என்கிறார்கள்! நாளைக்கு நமக்கும் இன்நிலை வருமோ? என்று அஞ்சுகிறார்கள்!

     ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்! அவர்கள் பாஜகவின் பக்கம் இருக்கிறார்கள்!

  நன்றி ;குமரிகிருஷ்ணன்

Leave a Reply