ராமாயண காவியத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல்வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவர். ராமனின் சேவகனாக வாழ்ந்த அனுமன் சீதா தேவியால் ‘சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. அவர் பிறந்த தினமே ‘அனுமன்ஜெயந்தி’யாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அனுமன் ஜெயந்தியான இன்று அனுமன் கோவில்களில் சிறப்புவழிபாடுகள் நடத்தப்படும். இந்நாளில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 'இந்த மங்களகரமான நன்நாளில் அனைவருக்கும் அனுமன் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.

மேலும், கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ்ரெய்னா, சேவாக், விவிஎஸ் லக்‌ஷமண் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட பலஅரசியல் தலைவர்கள் அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

ஒடிசாவின் மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாய்க் அனுமனின் புகழைபோற்றும் வகையில் பூரி கடற்கரையில் அனுமனின் சிற்பத்தை வடித்து அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply