பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில், நாட்டில் மதக்கலவரங்களின் எண்ணிக்கை 200 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ்நக்வி தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் தெரிவித்ததாவது: பிவண்டி (மகாராஷ்டிரா), மீரட்(உ.பி.,) ஆகிய பகுதிகளில் முன்புநேரிட்ட கலவரங்களில் 10 ஆயிரம்பேர் வரை கொல்லப்பட்டனர். தற்போது அதுபோன்ற மிகப்பெரிய கலவரங்கள் நாட்டில் ஏற்படவில்லை. கடந்தாண்டு உ.பி., மாநிலம் தாத்ரியில் முஸ்லீம் மதப்பெரியவர் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது. ஆனால், இச்சம்பவம் மதக்கலவரம் கிடையாது. இதுபோன்ற சில சம்பவங்களைத் தவிர்த்து, சிறுபான்மையினர் பார்வையில் மோடி அரசின்செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.

 

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் அறிக்கையின் படி, கடந்த 2 ஆண்டுகளில் மதக்கலவரங்கள் 200 சதவீதம் குறைந்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் மிகப் பெரிய கலவரம் எதுவும் நிகழ வில்லை. இதனால் சிறிய சம்பவங்கள் கூட மிகப் பெரிதாக்கப் படுகிறது. சிறுபான்மையினர் சமூகத்திலிருந்து அரசுப்பணிக்கு தேர்வானவர்களின் எண்ணிக்கையும் மோடி ஆட்சியில் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply