அரசமைப்புச் சட்டத்துக்குள்பட்டு வரிவருவாயை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளலாம் என 14ஆவது நிதிக் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்துகோருவது பொருத்தமற்றது


 அரசமைப்புச் சட்டத்துக்குள்பட்டு, வரிவருவாயை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ளும் முறையை 14ஆவது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது.

 பிகாருக்கு ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத்திட்டத்தை பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்துள்ளார்.  மேலும், செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு, ரூ.40,000 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கு மேலும் பிகாருக்கு நிதிஒதுக்கப்படும்.

 முதல்வர் நிதீஷ்குமார் கூறுவதை போல், இந்த சிறப்பு நிதியுதவி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களாகவே இருக்கட்டும்.

 ஆனால், நிதீஷ் தலைமையிலான மதச் சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான முந்தைய மத்திய அரசு, அந்த திட்டங்களை ஏன் செயல்படுத்த வில்லை என்று நிதீஷ் அவர்களிடம் கேட்க வேண்டும்.

 பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ஏற்கெனவே மூன்று கட்டங்களாக நடைபெற்ற வாக்குப் பதிவுகளில், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு பரவலான வரவேற்பு கிடைத்தது. இனிவரும் இரண்டு கட்ட வாக்குப் பதிவுகளிலும் அந்த வரவேற்பு நீடிக்கும்.

 பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு மீதான பிகார் மக்களின் நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும். மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் மாநில அரசை மக்கள் விரும்பு கின்றனர்.


 மதச்சார்பற்ற கூட்டணி, விரக்தியடைந்த வர்களின் கூட்டணியாகும். காங்கிரஸ் கட்சி தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கே பெரும்பாடுபட்டு வருகிறது. குடும்ப கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் ஒரு தலை முறை தேர்தல் களத்திலேயே நிற்கமுடியாது. அதனால், அடுத்த தலைமுறையை களத்தில் இறக்கியுள்ளது.

 மாட்டுத்தீவன ஊழலில் கைது செய்யப்பட்டு லாலுபிரசாத் சிறையில் இருந்தபோது, கட்சியில் இருந்து ஒருபகுதி தலைவர்களையும், தொண்டர்களையும் கவர்ந்திழுக்கலாம் என்று நிதீஷ்குமார் திட்டமிட்டிருந்தார்.


 ஆனால், அவருக்கு அதிர்ச்சிதரும் விதமாக லாலுபிரசாத் ஜாமீனில் வந்து விட்டார் என்றார் அருண் ஜேட்லி.

Leave a Reply