மதச்சுதந்திரம் என்ற பெயரில் அநீதி இழைக்கப் பட்டால் மத்திய அரசு தலையிடும் என மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

பெண்களின் கண்ணிய த்தையும், சம உரிமையையும் எந்த ஒருகாரணத்தை முன்னிறுத்தியும் பறிக்க முடியாது என கூறிய மத்திய அரசு, ‛தலாக்' விவாகரத்து முறைக்கு சுப்ரீம்கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தன.

ஐதராபாத்தில் செய்தியா ளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்ததாவது: மதச்சுதந்திரத்தை மத்திய அரசு ஆதரிக்கிறது. அதேசமயம், மதச்சுதந்திரம் என்ற பெயரில் அநீதி இழைக்கப் பட்டால் மத்திய அரசு தலையிடும். எனவே, பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நமதுநோக்கத்தை மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply