2017 – 18 மத்தியபட்ஜெட் 10 முக்கிய கருப் பொருளின் அடிப்படையில் வடிவமைக்கப் பட்டிருப்பதாக நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி 2017 – 2018-ம் நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

அவர் தனது பட்ஜெட் உரையில், 2017 – 18 மத்தியபட்ஜெட் 10 முக்கிய கருப்பொருளின் அடிப்படையில் வடிவமைக்கப் பட்டிருப்பதாக தெரிவித்தார். அவை:

1. விவசாயிகள் நலன்

2. கிராமப்புற மக்கள்நலன்

3. இளைஞர் மேம்பாடு

4. ஏழை, எளிய மக்களின் ஆரோக்கியத்தை பேணுதல்

5. உட்கட்டுமான மேம்பாடு

6. வலுவான நிறுவனங்களுக்கு சிறப்பு நிதித் துறை

7. பொது சேவை

8. பொறுப்புகளை துரிதமாக செயல்படுத்துதல்

9. நேர்மையானவர்களுக்கு ஏற்றவரிவிதிப்பு

10. விவேகமான நிதி மேலாண்மை

மேலும், "வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஒருகோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து மீட்க புதிய திட்டம் வகுக்கப்படுகிறது" என்று அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

Leave a Reply