மத்தியப் பிரதேசத்தில்  வரும் 25-ம் தேதி, ‘மாமா உணவகம்’ என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை  முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கிவைக்க உள்ளார்.  ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) நிறுவனர்களில் ஒருவரான தீன்தயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு, அவரது பிறந்த நாளில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. ‘தீன் தயாள் தாலி’ என்ற பெயரிலான இத்திட்டத்தின் கீழ் 4 ரொட்டிகள், சிறிதளவுசாதம், பருப்பு, காய்கறி மற்றும் புலாவ் உணவுசேர்த்து வெறும் 5 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து சிவராஜ்சிங் சவுகான் கூறும்போது, “இந்த உணவகங்கள் முதல் கட்டமாக ம.பி.யின் போபால், குவாலியர், இந்தோர், ஜபல்பூர் ஆகிய நகரங்களில் தொடங்கப்படும். இதன்வெற்றியை தொடர்ந்து படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்” என்றார்.

பின்பற்றும் மற்ற மாநிலங்கள்

Leave a Reply