மத்திய அமைச்சரவை நாளை மாற்றியமைக்கப் படுகிறது. 9 பேர் புதிதாக அமைச்சரா கின்றனர். இவர்கள் நாளை 11 மணிக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பதவியேற்கின்றனர். மத்திய அமைச்சரவை மாற்றிய மைக்கப்படும் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப் பட்டது. இதற்கு முடிவுகட்டும் விதமாக அமைச்சர்களை அழைத்து அவர்களின் செயல்பாடுகள் பற்றி பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு நடத்தினார். அதன் முடிவில் அமைச்சரவையில் இலாக்க மாற்றம் செய்வதுடன், காலியாக உள்ள இடங்களை நிரப்பவும் தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களுக்கு புதிதாக அமைச்சர்களை ஒதுக்கவும் நரேந்திரமோடி முடிவு செய்துள்ளார்.

புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளவர்களுக்கு நாளை காலை 11 மணிக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் வைத்து ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்கான அதிகாரப் பூர்வ தகவல் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இதனிடையே அமைச்சரவை மாற்றம்பற்றி சில தகவல்களும் வெளியாகியுள்ளன. உள்துறை, நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு உள்ளிட்ட முக்கியதுறைகளில் மாற்றம் இருக்காது என தெரிகிறது.

எரிசக்திதுறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கேபினட் அந்தஸ்து கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோன்று 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அமைச்சர்களாக இருக்கக்கூடாது என்றும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  அடுத்த ஆண்டு சட்டப் பேரவையை சந்திக்க உள்ள உத்திரபிரதேசத்திற்கு தாராளமாக புதிய அமைச்சர்பதவிகள் வழங்கப்படும் எனவும் எதிபார்க்கப்படுகிறது.

Leave a Reply