மத்திய அரசின் நேர்மை, சிறப்பானசெயல்பாடு குறித்து யாரும் கேள்விகேட்க முடியாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

உ.பி., மாநிலம் லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் அவர்பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிசெய்யும் பா.ஜ.,வின் செயல்பாடு குறித்தோ, நேர்மைகுறித்தோ யாரும் கேள்வி கேட்கமுடியாது. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. ஊழல்செய்த பா.ஜ., அமைச்சர்கள் யாரையும் காட்ட முடியுமா.

மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்தபின் இந்தியாவின் மதிப்பு உலகநாடுகளில் அதிகரித்துள்ளது. 7.5 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ள பொருளாதார வளர்ச்சியை விரைவில் இரட்டிப் பாக்குவோம் என சர்வதே நிதி அமைப்பு கணித்துள்ளது.
 

மின்இணைப்பு, சமையல் எரிவாயு, ரயில், சாலை போக்குவரத்து, தொழில்துறை முன்னேற்றம் என அனைத்திலும் இலக்கு நிர்ணயித்து சிறப்பாகசெயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply