மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு வெளி நாடுகளில் வங்கிக்கணக்குகள் இருக்கும் பட்சத்தில், அதன் விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 லோக்பால் சட்டத்தில் உள்ள விதிகளின்படி, மத்தியஅரசு ஊழியர்களிடம் இருந்து இந்த விவரங்கள் கோரப்பட்டுள்ளன.


 இதுதொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, அனைத்து மாநிலச் செயலர்களுக்கும், மத்திய அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, தங்களுக்குக்கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்தத் தகவலை தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply