மத்திய அரசும், அதன் முதலீட்டு அமைப்பான இன்வெஸ்ட் இந்தியா, உள்நாட்டு மற்றும் வெளி நாடுகளில் இருக்கும் சுமார் 300 நிறுவனங்களிடம் மிக முக்கிய பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

தற்போதைய நிலையில் வல்வரசுநாடுகளுக்கு இணையாக இந்தியா உயர வேண்டுமானால், சிறந்த உள்ளகட்டமைப்பு, எதிர் காலத் தொழிற் சந்தைகளின் தேவையைப் பூர்த்திச்செய்யும் அளவிற்கான கட்டமைப்புகள், சிறந்த சுகாதாரம் என தேவைகளைப் பூர்த்திச்செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

இதற்கான நிதி தேவையைப் பூர்த்தி செய்யவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்காக மத்திய அரசு 300 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மத்திய அரசும், இன்வெஸ்ட் இந்தியா அமைப்புத் தற்போது 300 நிறுவனங்களிடம் நடத்திவரும் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியாவிற்கு 62 பில்லியன் டாலர், அதாவது 4 லட்சம் கோடி ரூபாய் முதலீடும், 17 லட்ச வேலை வாய்ப்புகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது

தற்போது மத்திய அரசுசெய்துள்ள திட்ட வரைவின் படி 62 பில்லியன் டாலரி முதலீட்டில் 32 பில்லியன் டாலரை சீனவிடம் இருந்து ஈர்க்க இந்தியா முடிவுசெய்துள்ளது.

சீன நாட்டின் முதலீட்டின் மூலம் இந்தியாவில் அதிகள விலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவது மட்டும் அல்லாமல் இறக்குமதியில் அதிகளவில் குறையும்.

சீனா முதலீட்டு ஈர்க்கும் திட்டத்தில் 10 பில்லியன் டாலரை SANY என்னும் நிறுவனத்தின்வாயிலாக மட்டுமே ஈர்க்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்நிறுவனத்தின் வாயிலாக இந்தியாவில் காற்றாலைமூலம் மின்சார உற்பத்தியை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம்செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் டிலியான் வான்டா குரூப் என்னும் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ஹரியானா மாநிலம் பலதிட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதன் மூலம் 5 பில்லியன் டாலர்வரை முதலீட்டை எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் தொய்வடைந்துவரும் 70 திட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து 3 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை ஈர்த்து இத்திட்ட ங்களில் 3 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு இந்த 300 நிறுவனங்களிடம் செய்யும் பேச்சு வார்த்தையின் மூலம் இந்தியாவில் 295 புதியதிட்டங்கள் செயல்படுத்தப்படும். சுமார் 17 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

Leave a Reply