மக்களவைத் தேர்தல் நெருங்கியதை யடுத்து பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையிலான பாஜக மத்திய தேர்தல்குழு இன்று இரண்டாவது முறையாககூடி ஆலோசனை நடத்திவருகிறது.

மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பது குறித்து பாஜகவின் மத்திய தேர்தல்குழு இன்று (செவ்வாய்கிழமை) கூடியது. இந்தகூட்டத்தில் மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், கர்நாடக மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து, கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கையில்,

“முந்தைய கூட்டத்தில் 7 வடகிழக்கு மாநிலங்கள், பிகார், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்களை இறுதிசெய்துவிட்டது. இன்றைய கூட்டத்தில் மேலும் சில வேட்பாளர்கள் இறுதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.

இந்த கூட்டம் மீண்டும் நாளை நடைபெறும் என்று தெரிகிறது.

முன்னதாக, பாஜக தேசிய பொதுச்செயலாளர் மற்றும் சத்தீஸ்கர் மாநில பொறுப்பாளர் அனில்ஜெயின் தெரிவிக்கையில்,

“மக்களவைத் தேர்தலில் புதிய வேட்பாளர்களை நிறுத்துவதற்கு மத்திய தேர்தல்குழுவிடம் சத்தீஸ்கர் மாநில பொறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்” என்றார். இதன்மூலம், சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போதுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும்வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிகிறது.

Tags:

Leave a Reply