மகாராஷ்டிர மாநிலமக்களவை உறுப்பினரும் தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே நாடாளுமன்றத்தில் எழுப்பியகேள்வி ஒன்றுக்கு, மத்திய தொல்லியல் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் அளித்த பதில் திருப்தியில்லாததால், திமுக மக்களவை குழு துணைத் தலைவரான கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.

அப்போது, ‘’சுப்ரியா சுலே அவர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ’மத்திய அரசால் பாதுகாக்கபட்ட புராதன நினைவுசின்னங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், கட்டிடங்கள் கட்டுவதற்காக நிதி ஒதுக்க மாநிலஅரசுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது ‘ என கூறினார்.

  தமிழகத்தில் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்கள் நிறைய இருக்கின்றன. அந்தப்பகுதிகளில் எவ்வித கட்டுமானப்பணிகளுக்கும் மாநில அரசு அனுமதி அளிக்கமுடியாத நிலையே இருக்கிறது. தொல்பொருள்துறை தடைகளை ஏற்படுத்தியிருக்கிறதா? இதுகுறித்து அமைச்சர் தெளிவுபடுத்திட வேண்டுகிறேன்” என்றார் கனிமொழி எம்.பி.

கனிமொழி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல், “மத்திய தொல்பொருள்துறை பற்றி தமிழ்நாட்டில் சிலதவறான கருத்துகள் நிலவுகின்றன. மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அதன் விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. அந்தவிதிகளின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் வேறுபணிகளை செய்ய மாநில அரசுகளின் துறைகளுக்கு நாங்கள் பலமுறை அனுமதிக்கவில்லை. அதேசமயம், மாநிலங்களின் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டிய தேவைஇருந்தால், அனுமதிகள் வழங்கப்படுகின்றன.

இதில் எந்தசிக்கலும் இருக்காது. நாட்டிற்குள் மட்டுமல்ல, வெளியில்கூட விதிமுறைகளின் படியேதான் மத்திய தொல்பொருள்துறை செயல்படுகிறது.  மாநில அரசுகளுக்கு இது பற்றி ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை எங்கள் கவனத்துக்கு கொண்டு வரலாம். தொல்பொருள் துறை எந்த தடையையும் ஏற்படுத்தாது என உறுதியளிக்கிறேன்” என்று விளக்கமளித் திருக்கிறார் மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் படேல்.

Comments are closed.