மத சகிப்பின்மை விவகாரம் என்பது மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமை யிலான தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக தொடுக்கப்படும் பொய்பிரசாரம் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி குறிப்பிட்டுள்ளார்.

சம்பல் பூரில் புதன் கிழமை நடந்த பாஜக கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

மத சகிப்பின்மை என்கிற எதிர்க் கட்சிகளின் பொய்யான பிரசாரத்தை முறியடிக்க கட்சித்தொண்டர்கள் பாடுபட வேண்டும். குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, எதிர்க் கட்சிகள் அவரது நிர்வாகத்தை குறைகூறி வந்தனர். எனினும் அந்த மாநிலத்தில் முஸ்லிம் இனத்த வர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர்.

நாட்டில் மதச்சகிப்பின்மை நிலவுவதாக எதிர்க்கட்சியினர் தொடுக்கும் பொய் பிரசாரத்துக்கு கட்சியினர் தக்க பதிலடி தர வேண்டும். நீர்வளமும் கனிம வளமும் சரிவர பயன்படுத்தப் பட்டால், ஒடிஸா நாட்டிலேயே முதல் மாநிலமாக உருவெடுக்கும். இதுதொடர்பாக நான் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து விவாதிக்க விருக்கிறேன். நீர்வள ஆதாரங்களை சரியான முறையில் பயன் படுத்தி ஒடிஸாவை முன்னேற்றப் பாதையில் எடுத்துச்செல்ல விரிவான திட்டத்தை அவரிடம் ஆலோசிக்கவிருக்கிறேன். அதேபோல, ஹீராகுட் அணையை பார்வையிட்டு, மகா நதியில் கலக்கும் மாசு குறித்தும் முதல்வரிடம் விவாதிக்க விருக்கிறேன் என்று உமா பாரதி கூறினார்.

Leave a Reply