கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சமையல் கலைஞர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவுதயாரித்து கொடுக்கும் வேலைசெய்து வருகிறார். இதற்காக திருபுவனம் அருகாமையில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பதுவழக்கம்.

நேற்றுகாலை உணவு சமைப்பதற்கு தேவையான வேலை ஆட்களை எடுப்பதற்காக அருகே உள்ள கிராமத்திற்கு ராமலிங்கம் சென்றுள்ளார். அங்குள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயமக்கள் வசிக்கும் பகுதியில் தனது பணியாளர்களை ராமலிங்கம் தயார்படுத்தி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த முஸ்லிம் அழைப்புகளை சேர்ந்த நான்கு பேர் இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமுதாயத்தினரை மதமாற்றம் முயற்சியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த ராமலிங்கத்தையும் அழைத்து மதம் மாறுவது தொடர்பாக பேசினர்.

இதைக் கேட்டதும் சகோதர உணர்வுடன் பழகும் எங்களிடம் பிரிவினை வாதத்தை ஏற்படுத்துகிறீர்கள். எங்கள் நாடும், எங்கள் மதமும் அனைவரையும் சகோதரத்துடன் பார்க்கிறது. நீங்கள் தேவையில்லாமல் மக்களைப் பிரித்து இந்து சமுதாயத்தை அழிக்க முயற்சிக்கிறீர்கள். இது தேவையற்றது நீங்கள் அணிந்திருக்கும் தொப்பியை நான் அணிந்துகொள்ள தயார். நீங்கள் விபூதி பூசிக் கொள்வீர்களா. எங்கள் பகுதியில் உங்களுக்கு வீட்டுமனை கொடுக்கிறோம், உங்கள் பகுதியில் எங்களுக்கு வீட்டுமனை கொடுப்பீர்களா, நாங்கள் பள்ளிவாசலில் பிரார்த்தனை செய்வோம் நீங்கள் எங்கள் கோவிலில் நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதத்தைக் கூட சாப்பிட மாட்டீர்கள் உங்கள் செயலை நிறுத்துங்கள் என ராமலிங்கம் கூறினார்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்நிலையில் உணர்ச்சிவசப்பட்ட ராமலிங்கம் மதம் மாறும் மாறு கூறியவர்கள் அணிந்திருந்த குல்லாவை எடுத்து தனது தலையில் வைத்துக் கொண்டார். மேலும் தன் வசம் வைத்திருந்த விபூதியை அதில் ஒருவருக்கு பூசியும் விட்டார். உடனடியாக அந்த விபூதியை அழித்துள்ளனர். அப்போது நான் உங்கள் குல்லாவை வைத்திருக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் எங்கள் விபூதியை வைக்க மறுக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பிறகு அங்கிருந்தவர்கள் ராமலிங்கம் மற்றும் இருவரையும் அங்கிருந்து விலக்கி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த ராமலிங்கத்தை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமலிங்கம் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவரை தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தஞ்சை செல்லும் வழியிலேயே ராமலிங்கம் உயிரிழந்தார். மதமாற்றத்தை தட்டிக்கேட்ட ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலால் கும்பகோணத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply