'பா.ஜ.க, தேசிய தலைவர் அமித்ஷா, மத வெறுப் புணர்வை துாண்டும் வகையில் பேசியதாக கூறப்படும் புகாருக்கு, ஆதாரம் எதுவும் இல்லை' என, உ.பி., போலீசார் தெரிவித்துள்ளனர்.

உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ்யாதவ் தலைமையிலான, சமாஜ் வாதி ஆட்சி நடந்து வருகிறது . 2014ல் நடந்த லோக் சபா தேர்தலின் போது, அமித் ஷா, உ.பி.,யில், முசாபர் நகர் மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது, 'மோடி வென்றால், 'முல்லா' அரசு கவிழும்' என, அவர் பேசியதாக தவறாக கிளப்பிவிடப்பட்டது. .

இதையடுத்து, முஸ்லிம்களின் மத உணர்வுகளை, அமித்ஷா புண்படுத்திவிட்டதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தேர்தல்கமிஷன் உத்தரவுப்படி, அமித்ஷா மீது, உ.பி., போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.

இந்நிலையில், முசாபர்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில், போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், 'அமித் ஷா, மத மோதல்களை துாண்டும்வகையில் பேசியதற்கு, ஆதாரம் ஏதுமில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படை யில், அமித் ஷாவை இந்த வழக்கிலிருந்து, கோர்ட் விடுவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply