பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் சமீபத்தில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. அதில், மந்திரிகள் தங்கள் 3 மாத பயணவிவரங்கள் குறித்த அறிக்கையை 13–ந் தேதிக்குள் (இன்றைக்குள்) சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கு ஒருங்கிணைப் பாளராக கிராமப்புற வளர்ச்சி மேம்பாட்டுத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமரை அவர் நியமித்தார்.

மந்திரிகள் தங்கள் அறிக்கையில், பணமதிப்புநீக்க நடவடிக்கைக்கு பிறகு கடந்த 3 மாதங்களில் தங்களின் பாராளுமன்றதொகுதி உள்பட எங்கெங்கு பயணம் செய்தார்கள்?, அப்படி பயணம்செய்யாதவர்கள் டெல்லியில் தங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்தார்களா? என குறிப்பிடவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மந்திரிகள் தங்கள் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில்சென்று மக்கள் சேவை செய்தார்களா? கடந்த ஆண்டு நவம்பர் 8–ந்தேதி எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்களா? தங்கள் அலுவலகங்களில் கோப்புகளை ஆய்வுசெய்தார்களா? என்பதை அறியவே இந்த அறிக்கை பெறுவதின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply