அகில இந்திய வானொலியில் மாதந் தோறும் ஒலிபரப்பாகும் "மனதின்குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி வரும் 22ம் தேதி உரையாற்றுகிறார். இது பிரதமர்பேசும் 20ஆவது நிகழ்ச்சியாகும்.
 இதுதொடர்பாக பிரதமர் தனது சுட்டுரை பக்கத்தில் "1800-11-7800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு உங்கள் யோசனைகள், கருத்துகளைத் தெரிவிக்கலாம். "mygov.in' இணையதளம் மூலமும் மக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்' என கூறியுள்ளார்.


 இதுகுறித்து பிரதமர் அலுவலக அதிகாரி மேலும் கூறுகையில், "பிரதமரின் "மனதின்குரல்' நிகழ்ச்சியையொட்டி, மேற்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன், 15 சிறப்பு இணைப்புகள் கொண்ட தொலைத் தொடர்பு வசதியை அகில இந்திய வானொலி ஏற்பாடுசெய்துள்ளது. இந்த எண்ணில் கடந்த 15ஆம் தேதி முதல் ஏற்கெனவே மக்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர். கருத்துகளை பதிவுசெய்ய புதன்கிழமை (மே 18) கடைசி நாளாகும். பிரதமரின் உரை அகில இந்தியவானொலியின் அனைத்து அலைவரிசை களிலும் மே 22-இல் ஒலிபரப்பாகும்' என்றார்.

Leave a Reply