தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அமலில் இருக்கும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட அறிவுரை களுடன், பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலியின் மூலம் நாட்டுமக்களுடன் மாதம்தோறும் உரையாடி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு "மனதின் குரல்' என பெயரிடப்பட்டுள்ளது.

 அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை வானொலி நிகழ்ச்சியின் மூலம் உரையாட அவர் திட்டமிட்டுள்ளார்.

 இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில், சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் உள்ளன. ஆகையால், இந்த வானொலி நிகழ்ச்சிக்கு அனுமதிகேட்டு, தேர்தல் ஆணையத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் விண்ணப் பித்திருந்தது. இதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் உரையாற்ற அனுமதியளித்தது. சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநில மக்களிடையே எவ்வித பாதிப்பையோ, தலையீட்டையோ ஏற்படுத்தா வகையில் வானொலியில் உரையாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

 

Leave a Reply