மத்திய அரசின் ரூபாய்நோட்டு அறிவிப்பை ‘திட்டமிட்ட கொள்ளை' 'சட்டத்தின் பேரிலான அபகரிப்பு’ என்று மாநிலங்களவையில் கடுமையாகபேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், அவை முடிந்தபிறகு நேரில் சென்று கை குலுக்கி சிரித்து பிரதமர் மோடி பேசினார். முன்னதாக, மாநிலங்களவையில் ரூபாய்நோட்டு பிரச்சினை குறித்து விவாதம் தொடங்கியது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தில் பங்கேற்றார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்க மாநிலங் களைவைக்கு வந்தனர்.

ரூபாய் நோட்டு விவாதத்தை மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய மன்மோகன்சிங் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற மோடி அறிவிப்பால் ஏற்பட்ட பிரச்சினையை விவாதிக்க வந்துள்ளதாக மாநிலங்களவைக்கு வந்துள்ளதாக தெரிவித்தவர், ரூபாய் நோட்டு பிரச்சினையால் நாட்டில் மாபெரும் நிர்வாககுளறுபடி ஏற்பட்டுள்ளது என்றார். மத்திய அரசின் நிர்வாக தோல்வியால் ரூபாய் நோட்டு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் பேசிய மன்மோகன் சிங் தெரிவித்தார்.இதனையடுத்து அவை நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், மன்மோகன்சிங்கிடம் பிரதமர் மோடி சிரித்து கைக்குலுக்கி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply